Saturday, April 23, 2011

தேர்தல் நேரத்து சுப்பன்கள்..

மறுபடியும் ஒரு தேர்தல்,
சாயமும் தூரிகையுமாக சுப்பன்..
களமிறங்கினான் தன் தலைவனுக்காக..
வெள்ளைச்சுவர்கள் சாயப்பட்டன.
வெற்றிப்புன்னகையுடன் தலைவன், ஒரு சுவரில்..
அலட்சியப்புன்னகையுடன் கூர் வாள் ஏந்தி மற்றொரு சுவரில்..
கதாநாயகன் சிரிப்போடு, ஏனோ தெரியாது
இருந்தாலும் கைத்துப்பாக்கியுடன் இன்னொன்றில் !
சிங்கங்களுக்கு நடுவில் நிற்பது போல்,
போர் வீரன் உடையில்... கிரிக்கெட் மட்டையோடு...
காரணமில்லாமல் கோட்-சூட், குளிர் கண்ணாடி அணிந்து என்று
அடுக்கிக்கொண்டே போகலாம் அபத்தங்களை..

மாலை வீடு திரும்பினான் களைத்து...
இங்கே மட்டும் ஏனோ இவனால்
சிரிப்புச்சாயம் பூச முடியாத வாடிய முகங்கள்.

Saturday, April 9, 2011

கடிதம் எழுதி கொல்றது எப்படி??

கருணாநிதி கடிதம் எழுதினார் என் தமிழ் மீனவன் சாகிறான் என்று..
பிரதமர் சொன்னார், "செத்த பொறுங்க" என்று..
சரி என்று இவரும் தமிழ் மீனவர்கள் செத்ததைப் பொறுத்துக்கொண்டார்.

 
 

காகிதக்கப்பல் விட ஞானம் வேண்டுமா...


சென்ற வருடம் மழைக்காலம்
என் வீட்டுக்குள்ளும் மழை நீர்
கண்ணில் பட்டவரிடம் எல்லாம் புலம்பித்தள்ளினேன் வீட்டுக்குள் மழை நீர் என்று...
பிறகு தான் தெரிந்தது அதே மழையில் பக்கத்துக்கு வீட்டுக்காரரின் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது..

இந்த வருடம் அதே மழைக்காலம்
என் வீட்டுக்குள்ளும் அதே மழை நீர்
அதே நான் . . .
ஆனால் இப்போது காகிதக்கப்பல் சகிதமாக குழந்தைகளுடன் குதூகலமாக!