தொழில் நுட்பம்:
அழகாக தூங்கும் குழந்தையை கண்டவுடன்
அனிச்சையாக கை காமெராவை தேட..
பதிவு செய்தான் அந்த தூங்கும் ஓவியத்தை..
வந்தனம் சொன்னான் அறிவியலுக்கு.
அருகில் சென்று கன்னம் வருடியவன்
அந்த ஸ்பரிசத்தைப் பதிவு செய்ய கருவி இல்லையே என்று
அறிவியலை நொந்தான்!
காதல் :
நண்பன் கேட்டான் தனக்கு காதல் வாய்க்குமா என்று..
நான் சொன்னேன்,
முள் குத்துவதையும் தாண்டி உன்னால்
ரோஜாவை ரசிக்க முடியுமா..?
முடியும் என்றால் உனக்கு காதல் வாய்க்கும் என்று.
குடிசை வீட்டு பாப்பா:
சாலையில் செல்லும் மகிழுந்து* மாமாக்களுக்கு எல்லாம்
டாட்டா சொன்னது குடிசை வீட்டுக் குட்டிப்பாப்பா...
பெரியவளாகி தானும் ஒரு நாள் மகிழுந்துவில் செல்வோம் என்று எண்ணி இருக்குமோ !
* மகிழுந்து - car (it's sad that we don't use this beautiful tamil word in our daily life)
No comments:
Post a Comment