சில தமிழ் ஆர்வலர்கள் ஒரு படி மேலே போய் சில வார்த்தைகளை தமிழ்ப்படுத்துகிறார்கள். சமீபத்திய உதாரணம் முகநூல். இப்போது நிறைய பேர் இதை சொல்லாள இது இயல்பான ஒரு வார்த்தையாகவே வளம் வருகிறது. Facebook என்பது ஒரு பெயர்ச்சொல் அதை தமிழாக்கம் செய்வது சரியல்ல. F என்பதை எழுத தமிழில் ஆய்த எழுத்தை பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது. அதன்படி "ஃபேஸ் புக்" என்று தமிழில் எழுதுவதே சரியானதாக இருக்கும் !
சரி, யாரவது கெ.பொ.கோ.-வில் போய் சாப்பிட்டு இருக்கீர்களா? என்ன இப்படி யோசிக்கீங்க? நம்ம K.F.C தாங்க அது.. Kentucky Fried Chicken - அப்படியே தமிழில் மொழி பெயர்த்தால் "கென்டக்கி பொரித்த கோழி" தானே !
அப்ப hotmail என்பது "சூடான தபாலா" ?
அதே போல "sun micro systems" என்பது "சூரியன் நுண்ணிய அமைப்பா"?
"cloud nine" என்பதை "மேகம் ஒன்பது" என்று சொல்லி பாருங்கள்.. அடிக்க வருவாங்க.
இதே முறையில் நாம் ஒருவரது பெயரையும்(Mark, swift என்றெல்லாம் பெயர் உண்டு) தமிழ்ப்படுத்தினால் எவ்வளவு வேடிக்கையாக இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள்.
No comments:
Post a Comment