Friday, November 1, 2013

மரம் மழை தரும் !

மழை பெய்து முடிந்திருந்தது..
காற்றுக்கு ஏற்ப மரம் அசைந்து
சொற்ப துளிகளை மண்ணுக்கு அனுப்பிக்கொண்டிருந்தது.
"மரம் மழை தரும்" என்ற உண்மையை இந்த அவசர மனிதர்களுக்கு
நிரூபித்துக் கொண்டிருப்பதாகத்  தோன்றியது

Parenting...

குழந்தையின் கைக்குள் இருந்து தன் விரலை
குழந்தைக்கே தெரியாமல் விடுவித்துக் கொண்டு,
அவர்கள் சுயமாக நடப்பதை பின்னின்று
இரசிப்பதுதான் குழந்தை வளர்ப்பு.

இது நடை பயிலும் ஒரு வயதுக் குழந்தைக்கு மட்டுமின்றி
உலக நடப்பு பயிலும் பதினெட்டு வயதுக் குழந்தைக்கும் பொருந்தும்.
Parenting is not only about attachment..
its also about graceful detachment.

Farm hens..

தனக்காக வாழ்ந்து மனிதனுக்காக மடிந்த கோழிகள்,
இன்று மனிதனுக்காகவே வாழ்ந்து மனிதனுக்காகவே மடிகின்றன..
உயிரில் மட்டும் உரிமை கொண்டாடியவன்,
இன்று அவைகளின் வாழ்வையும் திருடிக்கொண்டான்.


Heroine of this poem (!) is my three year old daughter


I have a cute little daughter;
   always hops around with laughter
She is happy with whatever she has
   In her world, it's her the boss.

She turns the house upside down
   makes me to wish I'm out of town
When I find something is missing
   She is the one I must be checking

She is not scared of anything,
   Even ghosts, lies and betrayals are nothing
Never afraid to try-out new things tirelessly
   But still, if her instinct says she will give-up happily

She deals with one thing at a time,
   Anything else does not worth a dime
She does not know a lot of things
   Still she outsmarts many than one thinks

She forgives and forgets just like that,
   which is something even your God can’t !
From this little one there is a lot to learn
   To apply 'em all, I wish I'm born again

சிலேடை..


தமிழ் இலக்கணத்தில் சிலேடை என்று உண்டு. அது வேற ஒண்ணும் இல்லீங்க ஒன்றுக்கு மேற்ப்பட்ட பொருள் பட சொல்றது.. தமிழ் சினிமாவிலே அதிகமா வேண்டாம்னு இரட்டை அர்த்தத்தோடு நிறுத்திக்குவாங்க..முன்னாடி பார்த்திபன், இப்போ சந்தானம், விவேக், SJ சூர்யா இவங்கல்லாம் இந்த இலக்கணப்படி தான் அப்பப்போ எடுத்து விடுவாங்க, நகைச்சுவை என்ற பெயரில்.. நம்ம ஆளுங்களும் பயங்கரமா சிரிப்பாங்க. 

நானும் ஒன்னு சொல்றேன் நகைச்சுவையாக, 
"நம்ம அரசியல்வாதிகள் குழந்தைகள் மாதிரி தான் தெரியாம காச வாய்ல போட்ருவாங்க !"

இந்த வரியில், 1.தெரியாம 2.காசு 3.வாய் இந்த மூன்று வார்த்தைகளுக்கும் இரண்டு அர்த்தங்கள் உண்டு.. சொல்லாமலே புரியும்..