Friday, March 7, 2014

"ஆரோக்கியமாக வாழ.."

"ஆரோக்கியமாக வாழ.."  என்ற தலைப்பில் 400 பக்கத்தில் ஒரு புத்தகம் இருந்தாலும் நாம் அதை சளைக்காமல் படிக்க தயாராவோம். ஆரோக்கியம் அவ்வளவு சிக்கலான விஷயமா? அதற்க்கு இவ்வளவு பெரிய புத்தகம் தேவையா? என்றெல்லாம் நாம் யோசிக்க மாட்டோம். மருத்துவத்துறை அவ்வளவு நம்பகமாக இல்லாத இன்றைய நிலையில் கண்டிப்பாக ஆரோக்கியம் முக்கியமானது. 

நான் கேட்டது படித்ததை வைத்து ஆரோக்கியம் என்பதை நம் முன்னோர்கள் ரத்தினச்சுருக்கமாக ஆறு வார்த்தையில் சொல்லிவிட்டு போய்விட்டார்கள் என்று நம்புகிறேன். உண்மையில் அவை வார்த்தைகளல்ல மந்திரம். அவற்றை நாம் உள்வாங்கிக்கொள்வதில்லை. மிக எழிமையான விஷயம் தான். 
"பசித்து புசி" & "நொறுங்க தின்றால் நூறுவயது வாழலாம்"

கடுமையான உழைப்பாளிகளுக்கு நோய் வருவதில்லை. அவர்கள் சமவிகித உணவுசாப்பிடுகிறார்களா? உடலை பாருங்கள் six-pack இருக்கும். protein (புரதம்) எடுத்துக்கொள்கிறார்களா?  கலோரி கணக்கு அவர்களுக்கு தெரியுமா? இல்லையே. அவர்கள் ஒன்றை  சரியாக செய்கிறார்கள்.. பசித்து.. நன்றாக பசித்து சாப்பிடுகிறார்கள். 

நன்றாக மென்று சாப்பிடுகிறார்கள என்று என்னால் சொல்ல இயலாது..

சரி, இதிலிருந்து புரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் என்ன சாப்பிடுகிறோம் என்பதைவிட எப்படி சாப்பிடுகிறோம் என்பதே முக்கியம். 

ஆங்கிலத்தில் பிரபலமான ஒரு வாசகம் உண்டு, 
"An apple a day, keep the doctor away"
 
அவர்கள் தத்துவம் உணவை அடிப்படையாக வைத்து வந்துள்ளது. அதை தொடர்ந்து இவ்வளவு கலோரி ஒரு நாளைக்கு வேண்டும், இவ்வளவு புரதம் வேண்டும் என்று எல்லாமே உணவை சுற்றியே அவர்களுடைய தியரி உள்ளது. இவற்றிப்பற்றி எழுத 400 பக்கங்கள் கூட போதாது. எவ்வளவு எழுதினாலும் எடுத்துக்கொண்ட தலைப்பு முழுமை பெறாது.. 

ஆனால் நம்முடைய முன்னோர்கள் சொன்ன இந்த ஆறு வார்த்தைகள் ஆரோக்கியத்தின் இரகசியத்தை உள்ளடக்கியுள்ளது. முழுமை பெற்றது. பீடிகை ஏதுமில்லாததால், எழிமையாக இருப்பதால் நாம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம். கடினமாக இருப்பதாலும், அரை குறையாய் புரிவதாலும் 400 பக்க நிறைவு இல்லாத ஆங்கில புத்தகத்தை நாடுகிறோம்.  
  
வாழ்க்கையில் பல விஷயங்கள் எழிமையானவயே.. சிலர் வியாபார நோக்கத்தில் அதை கடினமானதாக காட்டி அதை நம்மை நம்பவும் வைத்துவிட்டார்கள். 

பசிக்காத போது சாப்பிடும் உணவும் அரைபடாத உணவும் நோய் உண்டாக்கும்.  மந்திரத்தை முயற்சி செய்து பாருங்கள்.. பலன் அடையுங்கள் !

No comments:

Post a Comment