******** காட்சி 1: அப்பா தன் இரு மகள்களுடன் அவர் வீட்டில்... ********
அப்பா: என்னம்மா சம்மர் லீவு விட்டாச்சு .. உங்கம்மா உங்கள எத்தனை class-ல சேத்துவிட்டுருக்கா.?
அக்கா : அத ஏம்ப்பா கேக்குறீங்க ! math, பாட்டு, டான்ஸ் and கராத்தே !! கீபோர்டுக்கு ஒருத்தர்கிட்ட விசாரிச்சுட்டு இருக்காங்க
அப்பா: என்னம்மா சின்னவளே .. நீ ஒன்னும் பேசாம இருக்க
தங்கை : ஒன்னும் சொல்றதுக்கில்லப்பா. நான் பயங்கர சோகத்துல இருக்கேன். விட்டா தாடியே வளர்ந்துடும்
அப்பா: ஹா..ஹா.. என் மனைவி சூப்பரோ சூப்பர். எப்படி உங்க ரெண்டு பேருக்கும் செக் வச்சா பாத்தீங்களா ?
தங்கை : ரொம்ப சந்தோசப்படாதீங்கப்பா .. ஒவ்வொரு class க்கும் pickup-drop நீங்க தான். அம்மாவை ஆபீஸ்ல ஏதோ புது ப்ராஜெக்ட்ல போட்டாங்களாம் ..so ..அம்மா escape !
அப்பா: என்ன..!? என்ன !!? இதெல்லாம் சரியில்ல சின்ன பிள்ளைங்க எப்படி இத்தனை class ஐ சமாளிப்பாங்க .. ஒரு break வேண்டாம் பிள்ளைங்களுக்கு. முதல்ல அம்மாட்ட பேசுறேன்
****** காட்சி 2: அப்பா வீட்டில் இருக்கையில் அவரது அக்கா வருகிறார் ... *********
Things needed: Pen Drive, Tablet
அப்பா : வா அக்கா..
அத்தை : வந்துட்டேன்.. எப்படிடா இருக்க.. ?
அப்பா : நல்லா இருக்கேன்.. நீ எப்படி இருக்க.. <அக்கா பெயர் >, உள்ள போய் காபி கொண்டுவாம்மா
அக்கா : kitchenல இருந்துதான்ப்பா வர்றேன். இன்னமும் காபி ரெடியாகிட்டு தான் இருக்கு..
தங்கை: அக்கா, மறுபடியும் போய் பாருக்கா .. அத்தை வந்துட்டா காபி ரெடின்னு அர்த்தம். காபி ரெடியான்னா அத்தை வந்துருவாங்கன்னு அர்த்தம் .. இல்ல அப்பா? ;)
அத்தை : அவ்வளவு கிண்டலா ?? ஹ்ம்ம்..ஒரு புது tablet கிடைச்சது .. உங்களுக்கு present பன்னலாம்னு எடுத்துட்டு வந்தேன் .. இப்படியெல்லாம் பேசினீனா காப்பிய மட்டும் குடிச்சுட்டு போயிட்டே இருப்பேன்..ஆமா.
அக்கா,தங்கை: ஓகே..ஓகே.. நாங்க கப்சிப். tablet ஐ காட்டுங்க.
(அத்தை showing the tablet )
அத்தை: நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதுல win பண்றவங்களுக்கு tablet ..ok வா?
அப்பா : ஓ .. நாரதர் ஞானப்பழத்துக்கு போட்டி வச்சாரே அந்த மாதிரியா ?
அத்தை: exactly .. இந்த ரெண்டு pen drive லயும் ஐம்பெருங்காப்பியங்கள copy பண்ணி வச்சுருக்கேன். ..அது சரி...., ஐம்பெருங்காப்பியங்கள் என்னென்ன ?
அக்கா, தங்கை: சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, சீவக சிந்தாமணி, குண்டலகேசி
அத்தை: சரியாய் சொன்னீங்க.. இப்ப ஆளுக்கு ஒரு pendrive ஐ கொடுக்குறேன் ..உங்கள்ள யாரு முதல்ல இதை தமிழ்த்தாயை போற்றி, தமிழ் வளர்க்குற இடமா பாத்து கொடுத்துட்டு வர்ரீங்களோ அவங்களுக்கு தான் இந்த tablet
தங்கை: அக்கா, நீயே அந்த tablet ஐ வாங்கிக்கோ.. என்ன ஆளா விடுங்க.. எனக்கில்லை..எனக்கில்லை வேற யாருக்கோ..கிடைக்கப்போது..(leaving out the hall, speaking this dialog)
************** காட்சி 3: **************
Things needed: Pen Drive, Smart Phone
அக்கா : ஹாய் guys இந்த pen drive ஐ ஒரு நல்ல தமிழ் establishment ல ஒப்படைக்கணும் .. ரொம்ப அவசரம்.
அக்காவின் ஃபிரண்ட் 1: ஏதோ james bond range க்கு பேசுற
அக்கா : விவரமா அப்பறம் சொல்றேன். ஏற்கனவே ஒரு நாள் முழுக்க இத பத்தி யோசுச்சுட்டேன் .. ஒன்னும் தோனல..உங்கள்ள யாருக்காவது அந்த மாதிரி இடம் தெரியுமா...?
அக்காவின் ஃபிரண்ட் 1: ஓ தெரியுமே ..google க்கு தெரிஞ்சா நமக்கு தெரிஞ்ச மாதிரிதான் .. இப்ப தேடிடலாம் ..
அக்காவின் ஃபிரண்ட் 2: இது ஒரு பெரிய விஷயமா..எங்கிட்ட கேட்டா சொல்லப்போறேன். University of Chicago , univ of Texas இங்கெல்லாம் தனியா தமிழ் வகுப்புகள் நடத்துறாங்க..அது போக தமிழ் மொழி சம்பந்தமா ஆராய்சிகளும் பண்றாங்க
(தங்கையின் ஃபிரண்ட் 1 and தங்கையின் ஃபிரண்ட் 2 are entering the scene ...but no dialogues for them in this scene )
அக்கா : wow great .. அப்ப நான் univ of Texas க்கே அனுப்பிடறேன். Georgia க்கும் பக்கம் . package-ம் சீக்கிரம் போய்டும்
அக்காவின் ஃபிரண்ட் 2: எனக்கு தெரிஞ்ச தகவல சொல்லிட்டேன்.. எதுக்கும் google ல check பண்ணிக்கோங்க
அக்காவின் ஃபிரண்ட் 1: ok <அக்காவின் ஃபிரண்ட் 2>, நீ google-அ விட better தான் .. ஒத்துக்குறோம்
அக்கா : நீங்க ரெண்டுபேரும் google better ஆ அல்லது <அக்காவின் ஃபிரண்ட் 2> better ஆ ன்னு பட்டிமன்றம் நடத்திட்டு இருங்க .. நான் Post Office க்கு கிளம்பறேன்
அக்காவின் ஃபிரண்ட் 1, அக்காவின் ஃபிரண்ட் 2: ஏய்..ஏய்.. கூப்பிட்டளேன்னு இவள நம்பி வீட்டுக்கு வந்தா தனியா விட்டுட்டு போயிட்டே இருக்கா !!!
************** காட்சி 4: **************
Things needed: Pen Drive
தங்கையின் ஃபிரண்ட் 1, தங்கையின் ஃபிரண்ட் 2: <தங்கை><தங்கை>,
தங்கை : ஹாய் friends .. எப்ப வந்தீங்க
தங்கையின் ஃபிரண்ட் 1: என்ன உங்க அக்கா friends இப்பவே காலேஜ்ல சேரப் போறாங்களா ? UnivOfTexas UnivOfChicago ன்னுலாம் பேசிட்டு இருக்காங்க..
தங்கை: அவங்க எதோ பண்ணட்டும் நாம விளையாடலாம்..
தங்கையின் ஃபிரண்ட் 1: ஏய்..நேத்து என் friend ஒரு சூப்பரான app ஒன்னு காமிச்சாள் .. tablet இருக்கா உன்கிட்ட ? நான் அத காட்டுறேன்
தங்கை : tablet ..tablet ... நம்ம விடாது போல இருக்கே.. இப்ப என்கிட்டே tablet இல்லை..ஆனா நமக்குன்னு ஒரு tablet கிடைக்க ஒரு வழி இருக்கு
தங்கையின் ஃபிரண்ட் 2: அது எப்படி?
தங்கை: அது ஒரு பெரிய flashback ... (spiralling on friends face ).. புரிஞ்சதா ?
தங்கையின் ஃபிரண்ட் 2: புரிஞ்சது புரிஞ்சது.. இப்போ எப்படியாவது அந்த pendriveஅ யார்ட்டயாவது தள்ளிவிடனும்.. அவ்வளவு தானே ?? :)
தங்கை : சுத்தம் !
தங்கையின் ஃபிரண்ட் 1: என்கிட்டே நிறைய kids movie இருக்கு .. இதுல copy பண்ணிக்கலாம் ..so எப்ப வேணாலும் பாக்கலாம் :)
தங்கையின் ஃபிரண்ட் 2: Or we can sell it on eBay .. that way we can make some quick bucks.. :) How many GBs it can hold ?
தங்கை: ஏதாவது உருப்படியான idea தருவீங்கன்னு உங்ககிட்ட கேட்டேன் பாருங்க என்னை சொல்லணும்
தங்கையின் ஃபிரண்ட் 2: ஐடியா ! ஐடியா !!
தங்கை: என்ன ? என்ன ??
தங்கையின் ஃபிரண்ட் 2: இப்ப ஏதும் இல்ல...வந்தா சொல்றேன் :)
தங்கை: உன்ன.. என்ன பண்றேன் பார். (acting as if going to hit him)
சரி உங்களை நம்பி பிரயோஜனம் இல்ல.. எனக்கு தெரிஞ்ச ஒரே தமிழ் பேசுற இடம் நம்ம தமிழ் பள்ளி தான் .. எனக்கு நெறைய தமிழ் பேசுற friendsம் அங்க தான் இருக்காங்க .. இத பேசாம அங்கேயே கொண்டு போய் கொடுத்துடலாம்னு நினைக்குறேன் .. வேற ஏதும் எனக்கு தோனல ..
தங்கையின் ஃபிரண்ட் 1: செம idea <தங்கை>
தங்கையின் ஃபிரண்ட் 2: pendrive போச்சே !!
************** காட்சி 5: **************
Things needed: 2 Tablets
அத்தை : பசங்களா ரெண்டு பேரும் pendrive-அ என்ன பண்ணீங்க
அக்கா : நான் UnivOfTexas ல உள்ள தமிழ் department க்கு போஸ்ட் பண்ணிட்டேன் ..இந்நேரம் அவங்களுக்கு கிடைச்சிருக்கும்
அத்தை: welldone <அக்கா>.. பின்னிட்ட .. <தங்கை >நீ என்ன பண்ணிருக்கீங்க ?
தங்கை: நான் ... வந்து... நான்...
அத்தை: சொல்லும்மா
தங்கை: நான் ... லில்பர்ன் தமிழ் பள்ளிக்கு கொடுத்துட்டேன் அத்தை
அத்தை: LTS லயா ??
all friends (chorusing ) : என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களேம்மா !
அத்தை: அட கிண்டல் பண்ணாதீங்க பிள்ளைகளா ... நான் tablet ஐ <தங்கை>க்கு தான் கொடுக்கபோறேன் .. அவ தான் winner
தங்கை: ஐ ... நிஜமாவா ??
அக்கா: அப்ப எனக்கு tablet கிடையாதா.. நான் தோத்துட்டேனா?
அப்பா: அப்படியில்லம்மா... LTSல பல வருஷங்களா எவ்வளவோ குழந்தைகளுக்கு தமிழ் கத்துக்கொடுத்துட்டு இருக்காங்க . பேச , எழுத கத்துக் கொடுக்குறது போக பல கலை நிகழ்ச்சிகள் மூலமா நம்ம ஊர் கலாச்சாரத்தையும் கத்துக்கொடுக்காங்க . பல பெற்றோரும் தன்னார்வத்தில முடிஞ்ச அளவுக்கு LTS மூலமா தங்கள் குழந்தைகளுக்கு தமிழை எடுத்துட்டு போறாங்க. அடுத்த தலைமுறைக்கு நம்ம மொழியை கத்துக்கொடுப்பதன் மூலமா இவங்கதான் உண்மையாவே தமிழை வளர்க்குறாங்க
தங்கை: அப்பா, நீங்க சொன்னப்பிறகு தான் LTS ல இவ்வளவு விஷயம் நடக்குதுன்னு புரிஞ்சுக்கிட்டேன். இது எதுவுமே தெரியாமத்தான் நான் pendrive ஐ LTS க்கு அனுப்பினேன் ..ஆனா அக்கா இந்த போட்டிக்காக friends கிட்ட discuss பண்ணா , இன்டர்நெட்ல research பண்ணா..post office க்கு லாம் போயி universityகு parcel அனுப்பினாள் .. அதனால நீங்க இத அக்காவுக்கே கொடுத்துடுங்க..
அத்தை: சரி.. சரி.. நான் ஒருத்தி பெரிய மனுஷி இருக்கேன்.. தீர்ப்பை நான் தான் சொல்வேன். தீர்ப்பு என்னன்னா "இந்த tablet உங்க ரெண்டு பேருக்கும் common .. share பண்ணி use பண்ணிக்கோங்க ".. இல்ல.. இது சரி வராதுன்னு நினைச்சீங்கன்னா, என்கிட்டே இருக்கவே இருக்கு இன்னொரு smart phone .. வேற போட்டி வச்சுடலாம்
குழந்தைகள்: மறுபடியும் மொதல்ல இருந்தா...???!!!! ( tablet ஐ அத்தை கையில் இருந்து பறித்து விட்டு....நாலா புறமும் தெறித்து ஓடுகிறார்கள் )
அத்தை: அட இங்க இருந்த குழந்தைகளை யாரவது பாத்தீங்களா??? (asking the audience ).. தப்பிச்சுட்டாங்க போல.. இப்போ போறேன்.. மறுபடியும்.... வருவேன் !
******** சுபம் ********
Small and crispy concept. But i can't understand what the story tells at the end.
ReplyDelete